உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, November 7, 2019

ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற வசதி விரைவில் அறிமுகம்

ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித் துறை விரைவில் அறிமு கம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந் தாலோ புதிதாக மாற்று பான காரடையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்ப தாரருக்கு வழங்கப்படும். அதார்கார்டு அடிப்படை யில் இது வழங்கப்படும்.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித் துறையில் இருந்து விண் ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை பயன்படுத்தி விண்ணப்ப தாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த் துக் கொள்ளலாம். பின் னர் புதிய இ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள்தான் பான் கார்டிலும் இடம் பெறும். ஆதாரில் உள்ள விவரங்கள் தவிர மற்ற விவரங்களை மட்டும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பான மாதிரி திட்டம் பரிசோ தித்து பார்க்கப்பட்டது. இதில் சுமார் 62,000 இ-பான் கார்டுகள் 8 நாட்களில் வழங்கப்பட்டது.

இதில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்த பிறகு, அடுத்த சில வாரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித் தார். ஆதார் கார்டு தொடர் பாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், மத்திய அரசு, பான் கார்டுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதிக தொகை பரிவர்த்த னையின்போது, வாடிக் கையாளர் தனது பான் எண்ணுடன் ஆதார் எண் ணையும் குறிப்பிட வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது ஆதார் கார்டு அடிப்படையில் இ-பான் கார்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment