அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தேர்வு மையங்கள் ரத்து '- தேர்வுத் துறை எச்சரிக்கை

அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களை ரத்து செய்யும்படி அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு களுக்கு பொதுத்தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இந்த பொதுத் தேர்வில் பிளஸ் 1-இல் மட்டும் வெறும் தேர்ச்சிமதிப்பெண்பெற்றால் போதும். மற்ற வகுப்புகளுக்கான தேர் வில், மாணவர்கள் அதிக மதிப் பெண் பெற்றால் மட்டுமே உயர் கல்விக்குச் செல்ல முடியும். நிகழ்கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர் வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வரு கிறது. வினாத்தாள் தயாரிப்பு, விடை எழுதும் தாள் தயாரிப்பு, தேர்வுக் கான மாணவர் விபரங்கள் சேக ரிப்பு உள்ளிட்ட பணிகள் இறு திக் கட்டத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வு மையங்களை ஒதுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து, மாநிலம் முழுவ தும் உள்ள முதன்மை கல்வி அதி காரிகளுக்கு தேர்வுத்துறை அனுப் பியுள்ள சுற்றறிக்கை பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க உள்ள, அனைத்து பள்ளிகளின் மாணவர்களையும் சரியாக கணக்கிட்டு, அதன்படி தேர்வு மையத்தைநிர்ணயிக்கவேண்டும். தேர்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயர், அங்கிகார விவரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே, தேர்வு மையங்க ளாகச் செயல்பட்ட பள்ளிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். புதிதாகதேர்வுமையங் கள் கேட்டுள்ள பள்ளிகளின் விவ ரங்கள், தனியாக இணைக்கப்பட வேண்டும்.

தேர்வு மையங்களாக செயல் பட உள்ள பள்ளிகள், அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின் றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட முடியாது. இதில் விதிமீறலோ , தவறு களோ ஏற்பட்டால் சம்பந்தப் பட்ட முதன்மை கல்வி அதி காரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment