தேர்வு பணிகளில் கணினி ஆசிரியர்கள் 

பொதுத்தேர்வு பணிகளில் கணினி ஆசிரியர்களை ஈடுபடுத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பணிச்சுமையை தவிர்க்கவும், வேலையை விரைவாக முடிக்க வும் அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் களை தேர்வுப் பணிகளில் ஈடு படுத்த தேர்வுத் துறை முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத் தில் இருந்து சேகரிக்க வேண்டும். அதன்பின் தேர்வுத் துறையின் வலைதளத்தில் மாணவர் விவரங் களை பிழையின்றி பதிவேற்றம் செய்ய கணினி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் சுமார் 80 கணினி ஆசிரி யர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment