நாட்டிய நாடகங்களுக்கான நிதியுதவி

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய் யும் நிறுவனங்களுக்கு நிதி வழங் கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் புதிய நாட் டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக் குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப் படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், உறுப்பினர் - செய லாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பென்னி பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரி, 044- 2493 7471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். நிதியுதவி பெற டிசம்பர் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment