சுடச்சுட இட்லி, உப்புமா, பொங்கல்... அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் மூலம் காலை சிற்றுண்டி வாகனங்களில் கொண்டுசெல்லவும் திட்டம்?

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற போகும் பள்ளிக் குழந்தைகளின் விவரங்களுடன், காலை உணவை எந்த வகையில் வழங்குவது என்ற ஆலோச னையில் அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 43 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 49.85 லட்சம் மாணவ, மாணவிகள் மதிய உணவை பெறுகின்றனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படி யாக சரிந்து வருவதை தடுத்து நிறுத்தவும், ஏழை, நடுத்தர மக்களின் குழந்தை களை முழுமையாக அர சுப்பள்ளிகளுக்கு திருப்பும் வகையில் சத்துணவு திட் டத்தை மேலும் விரிவாக் கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்து ணவை தொடர்ந்து காலை யிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிமுகப்ப டுத்த முடிவு செய்துள்ளது. அதன் படி காலை யில் இட்லி, பொங்கல், உப்புமா வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனையில் பள்ளிகளில் காலை சிற் றுண்டி வழங்கும் திட்டத் துக்கு 1500 கோடியே கூடுத லாக செலவாகும் என்று தெரிய வந்தது.

அதேநேரத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு மையங்களிலேயே தயா ரித்து வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இதை ஒவ்வொரு ஒன்றியத்தி லும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சத்து ணவு மையங்களில் ஒன்றை தேர்வு செய்து அங்கு காலை சிற்றுண்டியை தயார் செய்து வாகனங்கள் மூலம் கொண்டு சென்று வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'சத்துணவு மையங்களிலேயே காலை சிற்றுண்டி வழங்க வேண் டும் என்றால் அதற்கான சமையல் பாத்திரங்கள் உட்பட பல்வேறு வசதி களை செய்வதுடன், கூடு தல் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

ஆனால், அரசு வேறு வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத் துள்ளது. குறிப் பிட்ட இடங்களில் சிற்றுண்டியை தயார் செய்து பள்ளிகளில் நேரடியாக சென்று வழங்க உள் ளனர். அனேகமாக இத்திட்டம் தனியார் நிறு வனம் மூலமோ அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமோ செயல்படுத்த லாம்' என்றனர். 

No comments:

Post a Comment