உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, November 5, 2019

சிபிஎஸ்இ தேர்வு மாணவர்களுக்கு கால அவகாசம் 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக் கின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் இணையதளம் வழி யாக கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் மண்டல வாரியங்களுக்கு அனுப்பின. அந்த விவரங்களை சிபிஎஸ்இ சரிபார்த்தபோது, அதில் எழுத்துப் பிழைகள் அதி கம் இருந்தன. மேலும், சில மாணவர்களின் சான்றுகள் சமர் பிக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, பொதுதேர்வுக் கான மாணவர் விவரங்களில் நவம்பர் 11-ம் தேதிக்குள் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ காலஅவகாசம் வழங் கியுள்ளது. அதன்பிறகு அவ காசம் நீட்டிக்கப்படாது என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து பள்ளி முதல்வர்களையும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment