மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி டிசம்பருக்குள் அனுமதி கிடைக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

 • பள்ளி மாணவர்களுக்கு தொழிற் கல்வி பயிற்சி அளிப்பது தொடர் பாக வரும் டிசம்பர் மாத இறுதியில் அனுமதி கிடைக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். 
 • ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விநாடி வினா போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ தூய எப்பா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. 
 • அதில் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். அதில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங் கேற்று போட்டியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: 
 • தமிழகத்தில் மொத்த பட்ஜெட் டில் 4-ல் ஒரு பங்கு கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. தற் போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாடத் திட்டம், இந்திய அளவில் சிறப்பானதாக விளங்குகிறது. 
 • இந்தியாவில் பொறியியல் படித்த மாணவர்கள் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி திட்டத்தால், ஆடிட்டர் பணிக்கு 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். 
 • ஆனால் இந்தியாவில் 2 லட்சத்து 82 ஆயிரம் ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளனர். 
 • இந்நிலையில் தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை மூலமாக சார்டர்டு அக்கவுன்டென்ட் படிப்பில் சேர்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் படித்து முடித்து விட்டு வேலை இல்லாத நிலை தமிழகத்தில் இருக்கக்கூடாது. 
 • அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 முடித்தவுடன் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழிற்கல்வி கற்றுத்தரப்படும். 
 • அதற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து, அவற்றைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 • இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். 
 • டிசம்பர் மாத இறுதியில் உரிய அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. ஹூண்டாய் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியிலிருந்து அதிக அளவில் கல்வி தொடர்பான திட்டங் களுக்கு செலவிட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் விநாடி வினா போட்டிகள் நடத்துவது பாராட்டுக்குரியது. 
 • இவ்வாறு அவர் பேசினார். 
 • இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் பெருநிறுவன விவ காரங்கள் பிரிவு துணைத் தலைவர் பி.சி.தத்தா, சமூக பொறுப்பு நிதிப் பிரிவு பொதுமேலாளர் தேவ் தத்தா முல்சந்தானி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டே ஷன் ட்ரஸ்டி ஸ்டீபன் சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியை பிபுலா பிலென்சி ஜாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை மூலமாக சார்டர்டு அக்கவுன்டென்ட் படிப்பில் சேர்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment