மருத்துவ ஆய்வாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 

மருத்துவ ஆய்வாளர் பணிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 11-ம் தேதி தொடங்கு கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 49 ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 102 பேருக்கு இணையதளச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்ச்சி பெற்றவர்கள் அரசு இ - சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவல கத்தில் பொருளாதார வல்லுநர் மற்றும் சமூகவியலாளர் பதவியில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தற்காலிகமாக தேர்வான 6 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங் களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment