தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், மறுகூட்டலுக்கு வியாழக்கிழமை (நவ. 28) முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள்கள் ஒளிநகல் கோரி அக்.30 முதல் நவ.6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அந்த நாள்களில் விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் ஒளிநகல்களை புதன்கிழமை (நவ.27) முதல் சனிக்கிழமை (நவ.30) வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் மறு கூட்டல் தேவைப்படும் பட்சத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, வியாழக்கி ழமை (நவ. 28) முதல் டிச.3-ஆம் தேதி வரை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரடியா கச் செலுத்தி இணையம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். விடைத் தாள்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒருபாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment