மாணவர்கள் தனித்திறமையை கண்டறிவது அவசியம் - இஸ்ரோ தலைவர் கே.சிவன்

வாழ்க்கையில் வெற்றி பெறு வதற்கு, மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை கண்டறிவது அவசியம் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தின் (ஐ.ஐ.டி.) 50-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் கே.சிவன், மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

சந்திரயான் 2 திட்டம் குறித்து நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர் கள். நிலவில் தரையிறங்கும் பெரும் கனவுடன் நாங்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால், மிகச் சிறிய தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. சொல்லப்போனால், நிலவுக்கு 300 மீட்டர் தொலைவு வரை கூட லேண்டர் கருவி சிறப்பாக செயல்பட் டது. எனினும், மெதுவாக தரையிறங் குவதில் ஏற்பட்ட சிக்கலால் அந்தத் திட்டம் கைநழுவிப் போனது.

இவ்வாறு நடந்ததால், சந்திர யான் 2 திட்டம் அதோடு முடிந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது. அத்திட்டத்தை எதிர்காலத்தில் மீண்டும் செயல்படுத்தி இஸ்ரோ வெற்றி பெறும். தற்போது, விண்வெளியில் லேண்டர் கருவி களை மெதுவாக தரையிறக்குவதற் கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, விண் வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா எல்.1 சோலார் திட்டம் ஆகியவற்றையும் இஸ்ரோ செயல் படுத்த உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணுக்கு அனுப் பும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும்.

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை கூறிக் கொள்கிறேன். தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், அதனை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் மால் பல சாதனைகளை புரிய முடியும். நம் அனைவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே இயற்கை வழங்கியிருக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் உங்களுக்கு விருப்பமானதையும், உங்களின் திறமைக்கு ஏற்றதையும் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதற்கு முதலில், உங்களுக்குள் இருக்கும் தனித் திறமைகளை நீங்கள் கண்டறிய வேண்டியது அவசியம்.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே. சிவன் பேசினார். - பிடிஐ

No comments:

Post a Comment