மண்டல பூஜை தரிசனம் சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயி லில் இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக வரும் நவ. 16ம் தேதி நடை திறக்கப்ப டுகிறது. இதையொட்டி ஆன்லைன் தரிசன முன்ப திவை முன்னதாகவே தொடங்க தீர்மானிக்கப் பட்டது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு முன்பதிவு வசதி தொடங் கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பம்பையில் இருந்து 2 பாதைகளில் பக்தர்கள் செல்லலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாதையை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்களின் பெயர், வயது, புகைப்ப டம், முகவரி, அடையாள அட்டை எண், செல் போன் எண் ஆகிய விவரங் களை அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment