திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை (நவம்பர் 30) நடைபெறுகிறது

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பூ.தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவம்பர் 30) சென்னை நந்தனத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

எனவே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற அறிவுறுத்தப் படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரனை 044-24306611, 9487700180 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment