மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிக ளுக்கு மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் (2017-2019ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 49 பணியிடத்தை நிரப்புவதற் கான தேர்வை கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தியது. இதில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப் பிற்கு தற்காலிகமாக 102 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 2018-2019ம் ஆண்டுக்கான தமிழ் நாடு பொதுப்பணிக ளுக்கு சென்னை , சமூக நீதி மற்றும் மனித உரிமை, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற் கான சமூகவியலாளர் மற்றும் பொரு ளாதார வல்லுநர் பதவிக்காக நடத் தப்பட்ட தேர்வில் 6 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment