திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக் கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திற னாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 514 மையங்களில் கடந்த 3-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வுகளை சுமார் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில், திறனாய்வு தேர்வு சம்பந்தமான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதன் விவரங்களை மாணவர்கள், பெற்றோர் நாளைக்குள் (நவ.21) ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment