உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி தமிழக அரசு திட்டம்

தமிழக பள்ளிக் கல்வியின் கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளில், 2 லட்சத்து 30 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் உபரியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியர்கள் கடந்த ஜூலை மாதம் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

சில ஆசிரியர்களுக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்று பணி வழங்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து 1996-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப்பட்டியலை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு மாற்றுப்பணி இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment