தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்பு கவனம் தேவை  மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் 

தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்பு, கல்வி நிறுவனங் கள் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தொலைநிலை மற்றும் திறந்த நிலை கல்வியை ஒழுங்குபடுத் துவதற்காக அதை நிர்வகிக் கும் பொறுப்பு பல்கலைக் கழக மானி யக்குழுவிடம் (யுஜிசி) 2017-ம் ஆண்டு ஒப்படைக் கப்பட்டது.

இதையடுத்து தொலைநிலை கல்விக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டது. அதில் குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளி கள் பெற்றுள்ள கல்வி நிறுவனங் களுக்கு மட்டுமே தொலைநிலை கல்வி நடத்த அனுமதி தரப்படும் என்று யுஜிசி அறிவித்தது.

புதிய கட்டுப்பாடுகளின்படி தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் உட்பட 10 கல்வி நிறு வனங்களுக்கு மட்டுமே தொலை நிலை படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்தது.

இந்நிலையில் யுஜிசி செயலா ளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், “தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம் பெற்றதா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் தொலை நிலை படிப்புகளை வழங்க அனு மதிக்கப்பட்ட கல்வி நிறுவனங் களின் பட்டியல் மற்றும் பாடப்பிரிவு கள் விவரம் ஆண்டு வாரியாக ‌www.ugc.ac.in‌deb இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், எம்பில் மற்றும் பிஎச்டி படிப்புகளை தொலை நிலைக்கல்வி முறையில் வழங்க எந்த கல்வி நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, மாணவர்கள் கவனத் துடன் செயல்பட வேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளின்படி தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைநிலை படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்தது.

No comments:

Post a Comment