நிறுவனங்கள், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அரசு பள்ளிகள் பெற இணையவழி நிதி திரட்டும் முகமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியார் நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்பு நிதியை வழங் கவும், முன்னாள் மாணவர்கள் தங் கள் பங்களிப்பை அளிக்கவும் பள் ளிக்கல்வித் துறையால் உருவாக் கப்பட்ட இணையவழி நிதிதிரட்டும் முகமையை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய நிறுவனச் சட்டத்தின்படி பெரிய தொழில் நிறுவனங்கள் மற் றும் வணிக நிறுவனங்கள் அவற் றின் லாபத்தில் 2% தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடு களுக்காக பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள் ளிகளின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றனர்.

இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவும் வகை யில், எளிமையான நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற் படுத்தப்படவில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அவர்களுக்கென்று எளிய, நம் பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் இதுவரை ஏற்படுத் தப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத் துக்கு வரவில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு தொடர்ச்சி யாக உதவும் தனிநபர்கள், நிறு வனங்களின் தகவல் தொகுப்பை யும் பெற முடியவில்லை.

இந்த குறைகளை களையும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு செயல்பாடுகளின் பங்களிப்பையும், தன்னார்வலர் களின் பங்களிப்பையும் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தம் வகையில் இணையவழி நிதி திரட்டும் முகமையை (https:// contribute.tnschools.gov.in) பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையால் உரு வாக்கப்பட்டுள்ள இப்புதிய இணைய முகமை நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால், அதிக எண்ணிகையிலான தன்னார்வலர் களும், நிறுவனங்களும் ஆர்வத் துடன் பங்களிக்க முன்வருவார்கள். வெளிப்படைத்தன்மை காரண மாக அரசுப் பள்ளிகளின் முன் னேற்றத்துக்கு பொதுமக்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்.

இதன்மூலம் 2 சதவீதம் சிஎஸ்ஆர் நிதியை பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். நன்கொடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதால் தனி நபர்களும், நிறுவனங்களும் இத்தளத்தின் மூலமாக அதிக அளவில் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர். மேலும், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் தகவல் தொகுப் பையும் உருவாக்க முடியும்.

இணைய வழியில் திரட்டப் படும் நிதியானது அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி குறித்த விவரங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாக செயல் படும். அக்கழகத்தின் பொருளாள ரும் செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள்.

மேலும், இணையவழி கற்ற லுக்கு உதவும் DIKSHA இணைய தளத்தில் 313 பாடபுத்தகங்களில் 9 ஆயிரத்து 64 க்யூ ஆர் குறியீடு மூலம் 10 ஆயிரத்து 199 கற்றல் வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தளத்தை 4 கோடியே 92 லட்சம் பேர் ஸ்கேன் செய்தும், 2 கோடியே 39 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தியுள்ளனர். திக் ஷா செயலியை பயன்படுத்துவதில் சிறந்த 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்வதை பாராட்டும் விதமாக, கடந்த செப்.4-ம் தேதி டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ கத்துக்கு முன்னோடி மாநிலத்துக் கான தேசிய விருது வழங்கப் பட்டது. இந்த விருதை முதல்வர் பழனிசாமியிடம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பாடநூல்கழக தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கே.சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநர்கள் என்.வெங்கடேஷ், பெ.குப்புசாமி, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.நன்கொடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதால் தனி நபர்களும், நிறுவனங்களும் இத்தளத்தின் மூலமாக அதிக அளவில் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர்.

No comments:

Post a Comment