தனியார் துறை வேலைவாய்ப்புக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் அறிவுறுத்தல் 

தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற, மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் பங் கேற்க விரும்பும் இளைஞர்கள், வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு வேணு கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம், கிண்டியில் செயல்பட்டு வரு கிறது. இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்தில் இம்மை யம் செயல்படுகிறது. இதன்மூலம் தொழில்நெறி ஆலோசகர்களால் ஆலோசனைகள், அரசுப் போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகி யவை நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் தகுதியுள்ள நபர்களுக்கு தகுந்த தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யும் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு முகாம் கள் குறித்த விவரங்கள் அவ்வப் போது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இச்சேவையைப் பெற விரும் பும் இளைஞர்கள் ‘http://tnvelaivaaippu.gov.in/pdf/jobseekardetails.pdf’’ என்ற இணைப் பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment