இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று இணையத்தில் கலந்தாய்வு 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: சிறப் பாசிரியர்களுக்கு (இசை ஆசிரியர்) பொதுமாறுதல் கலந் தாய்வு இன்று (நவ.2) காலை 9 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கங்களில் நடைபெறவுள்ளது. இதனால் பொதுமாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்து கலந்தாய்வில் பங்கேற்க முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறும்.

இதையடுத்து தேர்வான இசை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வில் நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. When will promotion counselling for post graduate teacher to higher seceondary headmaster , PG s are waiting like parrot waiting for ripe of cotton while election department thinking of another election

    ReplyDelete