549 துப்புரவு பணியிடங்களுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பம்

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவுப் பணியிடங்களுக்கு 5,200 பேர் நேர்காணலில் பங்கேற்றதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் 5-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமின்றி, விண்ணப்பித் தவர்களில் சரிபாதி பேர் பட்டதாரிகளாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டுமின்றி பிசி, எம்பிசி பிரிவினரும் விண்ணப்பித்துள்ளனர்.

‘துப்புரவுப் பணியாளர் வேலைக்குச் சேர்ந்து, பின்னர் கல்வித் தகுதியை வைத்து எழுத்தர், கணினி பராமரிப்பாளர் உள்ளிட்ட அலுவலகப் பணிக்கு மாறிவிடலாம் என்ற எண்ணத்தில், அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.

No comments:

Post a Comment