டாஸ்மாக் தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 பேருக்கு பணி வழங்குவதில் தாமதம் தேர்வானவர்கள் குற்றச்சாட்டு

டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வில் தேர்ச் சிபெற்ற 500 பேருக்கு பணி வழங்குவதில் அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் குற்றம்சாட்டியுள்ளனர். டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 9 மையங்க ளில் நடைபெற்ற இத் தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர்.

இதைய டுத்து தேர்வு முடிவுகளை செப்டம்பர் 3ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் இணையதளத்தில் வெளி யிட்டது. அதன்படி, மதிப்பெண் அடிப்படையில் இத்தேர்வு முடிகள் வெளி யிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவ டிக்கைகள் குறித்து டாஸ் மாக் நிர்வாகம் அறிக்கை கேட்டது. இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நி லையில், தேரவு முடிவு கள் வெளியாகி இரண்டு மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவ ரையில் காலிப்பணியி டங்களை நிரப்ப அரசு நட வடிக்கை எடுக்க வில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதா வது:தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு மாதம் முடிவடைய உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் உடனடியாக பணி வழங் கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தேர்தல் வந்ததால் பணி வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், நேற்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதில், பணி நியமனத்திற்கான அனுமதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதுவும் நேற்று நடைபெற வில்லை. இதேபோல், விரை வில் உள்ளாட்சி தேர் தலை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையால் பணி ஆணை வழங்குவது தள்ளி செல்கிறது. எனவே, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு உடனடியாக பணி வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment