உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, November 6, 2019

சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு 

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித் துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல் பாடுகளை மேம்படுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த கல்வியாண்டில் (2018 - 19) சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்துக்கு தலா 4 பள்ளி கள் வீதம் 128 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை தரப்படும். இதற்கான வழி காட்டுதல்கள் இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட் டுள்ளது.

அதில் உள்ள விதிகளின்படி சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயாரித்து நவ.10-ம் தேதிக்குள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment