அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் ஆன்லைனில் பதிவு

தமிழக உயர் கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலி யாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத் திற்கு ஆன்லைன் மூலம் விண்ண ப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது. விண்ணப்பிப்ப தற்கான இறுதி நாளாக 15ம் தேதிமாலை 5 மணி வரை அவகாசம் இருந்தது. மாநிலம் முழு வதும் 44,767 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், இவர்க ளில் 33,128 பேர் மட்டுமே, விண்ணப்பத் துடன் சமர்ப்பிக்க வேண் டிய சான்றிதழ்களை பதி வேற்றம் செய்துள்ளனர். பல்வேறு தரப்பிலும், சான் றிதழ்களை பெறுவதில் சிக்கல் நிலவியதால், 11,639 பேர் முழுமையாக விண் ணப்பிக்க முடியவில்லை . இதனையடுத்து, சான்றிதழ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் களை பதிவேற்றம் செய்ய மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசி ரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப் பில், "உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் 15ம் தேதி மாலையுடன் நிறைவு பெற்றது. இதன் பின்னர், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது. முன் அனுபவ சான்றிதழ் பெற கால தாமதம் ஏற்படு வதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே விண்ணப்பித்த வர்கள் மட்டும் சான்றிதழ் களை பதிவேற்றம் செய்ய, பின்னர் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, பணி அனு பவ சான்றுகளை பெற முடியாத விண்ணப்பதா ரர்கள், இந்த மாத இறுதிக் குள் சம்பந்தப்பட்ட அலு வலரால் மேலொப்பமிட்ட சான்றுகளை பெற்று தயா ராக வைத்திருக்க வேண் டும். அதனை பதிவேற்றம் செய்வதற்கான தேதிகள், விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம் எஸ் வாயிலாகவும், இமெ யில் முகவரிக்கு மெயில் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். மேலும், கல் வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப் பித்த விண்ணப்பதாரர்க ளிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுகி றது. அவற்றை பதிவு செய்ய டிசம்பர் முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். அப்போது, கூடுதலாக கேட் கப் பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண் டும். அவை என்னென்ன விவரங்கள் என இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment