புதிதாக 440 தையல், ஓவிய ஆசிரியர்கள் பணி நியமனம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தையல், ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு 440 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியில் உள்ள 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் 2017 செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெற்றது. இதில் சான்றிதழ் சரி பார்ப்புக்கு 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களில் இசை ஆசிரியர் பணிக்கு 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த நவம்பர் 2-ம் தேதி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், தையல், ஓவியம் ஆசிரியர் களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற்ற கலந்தாய்வில் 240 ஓவிய ஆசிரியர்கள், 200 தையல் ஆசிரியர் கள் என மொத்தம் 440 பேருக்கு பணி நிய மன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment