சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘மகிழ்ச்சியான பள்ளி’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘மகிழ்ச்சியான பள்ளி’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நிறைவுபெற்ற திட்டப் பணிகளை பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். அருகில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் உள்ளனர்.

அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தன் னார்வ அமைப்புகள், நிறுவனங் களின் சார்பில் ரூ.30 லட்சத்தில் கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டிடங்களை புதுப்பித்தல், மழை நீர்த் தொட்டிகள் அமைத்தல், மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திட்டங்களை தொடக்கி வைத்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன் பேசும்போது, ‘‘பொருள தாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப் பள்ளி களை மேம்படுத்த தன்னார்வ அமைப்புகள் உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது. இதே போல், இதர அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தவும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்க வேண்டும்’’என்றார்.

ரோட்டரி சங்க நிர்வாகி சந்திரமோகன் கூறும்போது,‘‘இந்த பள்ளியில் நிறைவு பெற்ற பணிகள் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெறுவர். தொடர்ந்து தொழில் மேம்பாட்டு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி கள் மாணவிகளுக்கு வழங்கப் படும். அடுத்தகட்டமாக 26 அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள் ளோம்’’ என்றார். விழாவில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment