சந்திரயான் - 3 விண் கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தகவல்

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சந்திரயான் - 3 விண் கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித் துள்ளது.

இதுகுறித்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மைய அதிகாரிகள் நேற்று கூறிய தாவது:

சந்திரயான் - 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண் வெளி ஆய்வு மையத்தின் இயக் குநர் எஸ்.சோம்நாத் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இந்தக் குழுவினர், சந்திரயான்-3 லேண்டர், ரோவர், நிலவில் தரை யிறங்கி ஆய்வு செய்வதற்கான நடைமுறைகள் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் அறிக்கை தயாரித்து அளிப்பார்கள். சந்திர யான் - 3 திட்ட அறிக்கை கிடைத்த வுடன் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கிவிடும்.

இந்த முறை ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் இயக்கங் கள் குறித்த விஷயங்கள் மிகவும் கவனத்தில் கொள்ளப்படும். சந்திர யான் - 2-ல் நிகழ்ந்த தவறுகள் இந்த முறை திருத்திக் கொள்ளப் படும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத் தப்படும். சந்திரயான் - 3-ல் உரு வாக்கப்படும் லேண்டரின் கால்கள் மிகவும் பலமுள்ளதாக, எந்த சூழலி லும் தரையிறங்கும் வகையில் வடி வமைக்கப்பட உள்ளது. இவ்வாறு இஸ்ரோ மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விக்ரம் லேண்டரில் நடந்தது என்ன?

சந்கிரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்காமல் போனதற்கான காரணங்களை ஆராய கல்வியாளர்கள், இஸ்ரோ நிபுணர்கள் அடங்கிய தேசிய உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக இஸ்ரோ வின் திரவ எரிவாயு ஆய்வு மையத் தின் இயக்குநர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கமிட்டி பல்வேறு விஷயங் களை ஆராய்ச்சி செய்து, விக்ரம் லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதற்கான காரணங்களையும், தவறுகளையும் சுட்டிக் காட்டி யுள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையையும் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை விரைவில் விண் வெளி ஆய்வு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்த வுடன், அந்த அறிக்கை விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

No comments:

Post a Comment