அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரு நாட் களுக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகளிலும், 6, 7, 8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண் டாம் என அறிவுறுத்தப்படு கிறார்கள்.

மஹா புயல், அதிதீவிர புயலாக மாற்றியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. இது 6-ம் தேதி இரவு அல்லது 7-ம் தேதி அதி காலை, குஜராத் மாநிலம் போர் பந்தர் அருகே கரையை கடக்கக் கூடும்.

டெல்லியில் இருந்து சென் னைக்கு காற்று மாசு வர வாய்ப் பில்லை. சென்னையில் காற்று மாசு ஏற்பட்டால், அது சென்னை யில் உருவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது. தற்போது ஈரப் பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசி வருவால் அது காற்று மாசை கட்டுப்படுத்திவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment