சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம் 26-ந் தேதி கடைசி நாள்

பொது வினியோகத் திட்டத்தில் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டையை அரிசி பெறக் கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, வருகிற 26-ந் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவல் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment