சென்னை பல்கலை.யில் 1980-81 முதல் தற்போது வரை அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டி யன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வித் திட்டத் தில் 1980-81-ம் கல்வி ஆண்டு முதல் தற்போது வரை படித்தவர் களில் சில பாடங்கள் மட்டும் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத் துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி தோல்வியுற்ற மாண வர்களுக்காக நடப்பு கல்வி ஆண் டில் டிசம்பர், மே மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளன. எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.

அதன்படி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பல் கலைக்கழகத்தின் www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை, மேற் கண்ட இணையதளம் மூலமா கவோ பல்கலை. அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அறியலாம்.

No comments:

Post a Comment