நவம்பர் 19-ல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழகத்தின் 162-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக் கழகத்தின் 162-வது பட்டமளிப்பு விழா, வளாக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நவம்பர் 19-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டம் பெற உள்ளனர். பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகிக்க உள்ளார். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்துகொள்வார். மேலும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தி.ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்ற இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment