காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு 18-ல் தொடக்கம்

காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு நவ. 18-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் பொது தேர்வுக்கான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை சில நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டன.

இத்தேர்வுகள் வரும் 18-ம் தேதி முதல் 15 மாவட்ட தேர்வு மையங்களில் தொடர்ச்சியாக தொடர்ந்து நடக்க உள்ளது. எனவே, ஏற்கெனவே அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போட்டியில் வரும் 18-ம் தேதி முதல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment