13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பள்ளி கல்வித் துறையில் ஆணையர் பதவி உருவாக்கம்

தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலர் கே.சண் முகம் வெளியிட்ட அறிவிப்பு:

கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையராக உள்ள சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வித் துறை ஆணையராகவும் (இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது), நில சீர்திருத்தத் துறை இயக்குநர் வி.கலையரசி, கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணைய ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய மதுரை முன்னாள் ஆட்சியர் டி.எஸ்.ராஜசேகர், மருத் துவ பணியாளர்கள் தேர்வுக் கழக தலைவராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிர மணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வும், அப்பதவியில் இருந்த எஸ். பழனிசாமி பேரூராட்சிகள் இயக்கு நராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநக ராட்சி துணை ஆணையர் (பணி கள்) எம்.கோவிந்தராவ், தஞ்சை மாவட்ட ஆட்சியராகவும், அப்பதவி யில் இருந்த ஏ.அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சிய ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏ.சிவஞானம் சுகாதாரத் துறை இணை செயலராகவும், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ஆர்.கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

தாட்கோ மேலாண் இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் உணவுப் பொருள் வழங்கல் ஆணைய ராகவும், வேளாண் துறை சிறப் புச் செயலர் சி.முனியநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், தாட்கோ மேலாண் இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக முனியநாதனிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் கே.வி.முரளிதரன், தமிழ் நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநராகவும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பி.குமரவேல் பாண்டியன் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) ஆகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment