உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

2021-ம் ஆண்டு முதல் ஜேஇஇ முதன்மைத் தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வரும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மைத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தி வருகிறது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு, குஜராத் மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க குஜராத்தி மொழியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிற மாநில அரசுகள் தங்கள் மாநில மொழிகளில் ஜேஇஇ தேர்வை நடத்துமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்காத காரணத்தால்தான் மாநில மொழிகளில் தேர்வை நடத்துவதில்லை என்று கடந்த மாதம் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.

இருப்பினும், மேற்கு வங்க மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2020-ம் ஆண்டில் வங்க மொழியில் தேர்வை நடத்துவது சிரமம் என்பதால், 2021-ம் ஆண்டு முதல் வங்க மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும், வங்க மொழி மட்டு மல்லாது, தமிழ், தெலுங்கு, அஸ்ஸாமிஸ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, ஒடியா, உருது ஆகிய 11 மொழிகளிலும் 2021-ம் ஆண்டு முதல் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள், அட்டவணை உள் ளிட்டவற்றை முன்கூட்டியே தயாரித்து விட்டதால் உடனடியாக மாநில மொழிகளில் தேர்வு நடத்த இயலாது என்றும், 2021-ம் ஆண்டு முதல் 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், அவரவர் தாய்மொழியிலேயே ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள், அட்டவணை உள்ளிட்டவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்டதால் உடனடியாக மாநில மொழிகளில் தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளது.

No comments:

Post a Comment