தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

10-ம் வகுப்பு

10-ம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 13-ம் தேதி தமிழ், 16-ம் தேதி ஆங்கிலம், 17-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 18-ம் தேதி கணிதம், 20-ம் தேதி அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11-ம் வகுப்பு

11-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளன. அதன்படி, 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி இயற்பியல், பொருளி யல், 16-ம் தேதி கணிதம், விலங் கியல், வணிகவியல், 18-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 20-ம் தேதி கணினி அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

12-ம் வகுப்பு

12-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.

அதன்படி 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 16-ம் தேதி இயற்பியல், பொருளியல், 18-ம் தேதி கணினி அறிவியல், 20-ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 23-ம் தேதி, உயிரியல், தாவரவியல், தொழில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment