10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான  கால அளவு 3 மணி நேரமாக நீட்டிப்பு 

  • 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கால அளவை 3 மணி நேரமாக அதிகரித்து கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
  • இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில், ‘‘புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்க தேர்வுத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். 
  • இதை பரிசீலனை செய்து 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் கால அளவு 2.30-ல் இருந்து 3 மணி நேரமாக நீட்டிக்கப்படுகிறது. 
  • இதற்கேற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment