பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத் தேர்வுகள்: மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்ற உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் குறித்த பல்வேறு விவரங் களை முறையாக சரிபார்த்து 'எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக ளின் தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இணை இயக்குநர்செ.அமுதவல்லி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகா ரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வுள்ள மாணவர்கள் பெயர் பட்டியல் 'எமிஸ்' இணையதளத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட உள்ளது. எனவே, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், செல்லிடப் பேசி எண், முகவரி, பயிற்று மொழி உள்ளிட்டவிவரங்கள்'எமிஸ்' இணை யதளத்தில் சரியாக இருப்பதை தலை மையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண் டும். ஏதேனும் திருத்தங்கள் இருப் பின் நவம்பர் 18 முதல் 29-ஆம் தேதிக் குள் அவற்றை எமிஸ் இணையதளம் வழியாகவே மேற்கொள்ளலாம். பள் ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவர்களின் விவரங்களையும் தவறாமல் பதிவேற்ற வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு.... இதுகுறித்து அனைத்து மேல்நிலைப் பள் ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றிக்கை : பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. நிகழ் கல்வியாண் டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பள்ளி கல்வியின் நிர்வாக மேலாண் தளமான 'எமிஸ்' தளத்திலும் தேர் வுத் துறையின் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். மாணவர் களின் பெயரை தமிழ் மற்றும் ஆங் கிலத்தில் மட்டுமின்றி பிறந்த தேதி, புகைப்படம் பாலினம், ஜாதிரீதியான வகைப்பாடு, மதம், மாற்றுத் திறனாளி வகை, பெற்றோர் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவரின் வீட்டு முகவரி போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும். பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் பெறாமல் நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத மாணவரின் பெயரும் கட்டாயம் இடம் பெறவேண்டும். மேலும் மாணவரின் அண்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படமும் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த விவரங்களை நவ. 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment