அரசின் உயர்கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு 

மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அறிவிப்பு தற்போது வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல், ஏற்கெனவே 2015, 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப் பட்டு உதவித்தொகை பெற்று வருபவர்களும் மேற்கண்ட இணையதளம் வழியாக புதுப் பித்தலுக்கான விண்ணப்பங் களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அக்.31-ம் தேதி யாகும்.

இவ்வாறு கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment