உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, October 21, 2019

SAEEE-2020 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு 2020 ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள்

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப் படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு (SAEEE-2020) விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து சத்யபாமா பல் கலை. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.டிஸ். படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் சேர விரும்புபவர்கள் அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வு (SAEEE-2020) மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

SAEEE தேர்வு வரும் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் 40 முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. ஏரோ நாட்டிகல், ஆட்டோமொபைல், பயோமெடிக்கல், பயோடெக்னா லஜி, கெமிக்கல், சிவில், கம்ப் யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கா னிக்கல், இன்டீரியர் டிசைன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட 16 பிரிவுகளில் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு பிளஸ் 2, அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் வரும் 2020 ஏப்ரல்/மே மாதங்களில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம். மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப் பெண் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான மாணவ, மாணவி கள் பல்கலை. நிர்வாக அலுவலகத் தில் விண்ணப்பங்களை பெற்றோ, ஆன்லைன் மூலமோ விண்ணப் பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை நெட் பாங்கிங், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம்.

தேர்வு தொடர்பான மேலும் விவரங்களை www.sathyabama.ac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment