உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Friday, October 4, 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க செயலி

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகளை கண் காணிக்க செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் கற்றல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கும் முறையை கல்வித்துறை கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டம் சோதனை முறையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்க ளில் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் புதிதாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வகுப்பறைகளில் கற்பிக் கும் வழிமுறைகள், மாணவர் களின் கற்றல் திறன், மாணவர் கள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித் தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல் வழிக் கற்பித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆசிரியர்கள் தினமும் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்துவர்.

பள்ளி ஆய்வின்போது இந்த செயலியின் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் செயல்பாடுகள் மதிப் பீடு செய்யப்படும். முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகமாகி யுள்ளது. அதன் குறைகளை சரிசெய்து மாநிலம் முழு வதும் விரைவில் அமல்படுத்தப் படும்’’என்றனர்.

No comments:

Post a Comment