முதுநிலை மருத்துவ மாணவர்கள் இறுதித் தேர்வுக்கு தகுதிபெற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், இறுதித் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் பணியாற்றவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) பரிந்துரைத்துள்ளது. இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள், இறுதித் தேர்வு எழுதுவதற்கு, ஆரம்ப சுகாதார மையம், நகர்ப் புற சுகாதாரமையம் ஆகியவற்றில் 3 மாதங்கள் கட்டாயமாக பயிற்சி (இன்டென்ஷிப்) மேற்கொள்ள வேண்டும் என்பது நடைமுறை யாக உள்ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் களுக்கும் இதுபோன்ற நடை முறையை அமல்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத் துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக் குழு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது: மாவட்ட அரசு மருத்துவமனைகள், சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக உள்ளன. மருத்துவக் கல்லூரியுடன் உள்ள மருத்துவமனைகளை விட மாவட்ட அரசு மருத்துவமனைகளே ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் வசிக்கும் இடங்க ளுக்கு அருகில் உள்ளன. முதுநிலை மருத்துவம் பயின்றதும், ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பு மருத்துவராகப் பணியாற்ற இருக்கும் மாணவர்கள், அந்தத் துறையில் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள், இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன்னர் சுழற்சி முறையில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக ளில் பணியாற்ற வேண்டும். இதன் மூலம், ஊரகம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக ளில் சிறப்பு மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நீங்கும். மாணவர்களது பயிற்சிக் கால பணி திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அவர்கள் இறுதித் தேர் வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்தப் பரிந்துரைகளை அடுத்த 3 மாதங்களுக்குள் மத்திய சுகாதாரத்துறை நிறைவேற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment