இன்று முதல் ஆன்லைன் மூலம் வரித் தாக்கல் மதிப்பீடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைக்கிறார்

வரிக் கணக்கு தாக்கல் நடைமுறை களை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த மனித குறுக்கீடுகள் இல்லாத ஆன்லைன் மூலமான மதிப்பீட்டு முறையை வருமான வரித் துறை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆன்லைன் வரித் தாக்கல் மதிப்பீட்டு முறையை தேசிய அளவில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைக்கிறார்.

வரிக் கணக்குத் தாக்கல் மற்றும் மதிப்பீடு முறைகளை வெளிப் படையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த இந்த முறை உதவும். வரிச் செலுத்துவோருக்கும் வரித் துறை அதிகாரிகளுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவே அனைத்து மதிப்பீடுகளையும் செயல்படுத்த இந்த முறை வழிவகுக்கிறது.

இதற்கான தேசிய ஆன்லைன் மதிப்பீட்டு மையத்தை வருமான வரித் துறை அமைத்துள்ளது. இதை இன்று நிதியமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

புதுடெல்லியில் நடக்கும் இந் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகுர், வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வருமான வரித் துறை அலு வலகங்கள் அனைத்தும் காணொலி மூலம் இணைக்கப்பட்டு நாடு முழு வதும் ஒரே நேரத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இனி வருமான வரித் துறை நோட்டீஸ் ஆன்லைன் மூலமாகவே அனுப்பப்படும், அதற்கான பதிலையும் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். இருந்த இடத்திலிருந்தே இனி வருமான வரித் துறை தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வருமான வரித் துறை அலு வலகங்கள் அனைத்தும் காணொலி மூலம் இணைக்கப்பட்டு நாடு முழு வதும் ஒரே நேரத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment