கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கதர் சீருடை  அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் நாடு முழுவதும் 1,225 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 767 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 45,477 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

தற்போது மாணவர்களுக்கு பாலிஸ்டர் உட்பட பல்வேறு வகை துணிகளில் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலை யில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நலிந்து வரும் கதர் தொழிலை மீட் டெடுக்க உதவும் விதமாக கதர் துணியாலான சீருடைகளை மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் வழங்க கேந்திரிய வித்யா லயா சங்கேதன் அமைப்பு திட்ட மிட்டுள்ளது.

இதேபோல், ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை கதர் ஆடை அணிந்து பள்ளிக்கு வரவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அமைப்பின் ஆணையர் சந்தோஷ் குமார் மால் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது குறித்து ஆலோச னைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. விரைவில் இது உறுதி செய்யப் படும்’’என்றார்.

இதற்கிடையே சமீ பத்தில் மாணவர்கள் மாதம் ஒருமுறை கதர் ஆடை அணிந்து பள் ளிக்கு வர முதல்வர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் சிபிஎஸ்இ வாரியம் உத் தரவிட்டது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment