நெட் தேர்வு சென்னை பல்கலை.யில் இலவச பயிற்சி வகுப்பு

தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) பங்கேற்க இருப்பவர்களுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. - கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறு வதற்கும், தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இப்போது டிசம்பர் மாதத் தேர்வானது வரும் டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையி லான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும்9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது. இந்த இலவச பயிற்சியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற் றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் மட்டுமே பங் கேற்க முடியும். பயிற்சியானது அக்டோபர் 19 முதல் நவம்பர் 17-ஆம் தேதி வரை நடத்தப்ப டும். இதற்கான விண்ணப்பங்கள் இப்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 16 கடைசி நாளாகும். விண்ணப்பப்படிவத்தை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

No comments:

Post a Comment