ஜி ஜின்பிங் - மோடி சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

உலகில் முதலில் நாகரி கம் அடைந்த குடிகளில் தமிழ்க் குடியும் ஒன்று. பன் னெடுங்காலத்துக்கு முன் னரே கடலோடுவதிலும், கடல் கடந்த வியாபாரம் செய்வதிலும் தமிழர்கள்தனி தேர்ச்சி பெற்றிருந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கிழக்கு பேர ரசாக இருந்த சீனாவும், மேற் கத்திய பேரரசாக இருந்த ரோம் சாம்ராஜ்யமும் தமிழ கத்தையேதங்களின் வர்த்தக மையமாகக் கொண்டிருந்தன. கிழக்கில் இருந்து வந்த பொருட்களையும், மேற்கில் இருந்து வந்த பொருட்களை யும் தமிழக வணிகர்களே வாங்கி விற்று வந்தனர். சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சீனப்பட்டு, குணகடல் துகிர்று என் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு பின்னர் முடிவேந்தர்மூவரின் ஆட்சி யும் முடிந்துகளப்பிரர் ஆதிக் கத்தில் தமிழகம் கட்டுண்டு கிடந்த மூன்று நூற்றாண்டு காலத்திலும் தமிழகத்திற் கும் சீனாவுக்குமான வணி கம் தொடர்ந்தது.

நரசிம்மவர்மன் கி.பி. மூன்றாம் நூற்றாண் டில் காஞ்சிபுரத்தை தலைந கராக கொண்டு பேரரசை உருவாக்கிய பல்லவர்கள், தொடக்கம் முதலே சீனத்து டன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அ வர் க ளின் துறைமுகமாகமாமல்லபுரத் தில் சீன வணிக கப்பல்கள் நின்றன.மாமல்லனான முத லாம் நரசிம்மவர்மன் காலத் தில் சீனப் பயணியான யுவான் சுவாங் காஞ்சிபுரத் திற்கு வருகை தந்தார். முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில்தான் சீனப்பட்டுத் துணி முதலில் காஞ்சிபுரத் தில் நெசவு செய்யப்படத் தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை காஞ்சிப் பட்டு தனி சிறப்பு பெற்றிருக்க, இந்தியாவி லேயே முதன் முதலில்காஞ் சியில்தான் பட்டு நெசவு தொடங்கியது என்பதேகார ணம். பட்டு நெசவு ரகசியத் தைப்பெறதமிழகத்தின்புரா தன மருத்துவத்தை சீனத் திற்கு பல்லவர்கள் தாரை வார்க்க நேர்ந்ததாகக் கூறுகி றார்கள் வரலாற்று ஆய்வா ளர்கள். அத்துடன்நாகையில் சீன வணிகர்கள், துறவிகள் தங்க இரண்டாம் நரசிம்மவர் மன் சத்திரமும், கோவிலும் கட்டவும் அனுமதி அளித் தான். சீனநாட்டு புத்தமதமாண வர்கள் படிக்கும் கடிகைக ளும் காஞ்சியில் கட்டப்பட் டிருந்தன.

முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவதூதுக்குழுவினர்சீன மன்னரின் அவையில் வீற்றி ருந்தனர். அபராஜிதவர்மன் நரசிம்மவர்மன் காலம் முதல் பல்லவர்களின் கடைசி மன்னனான அபரா ஜித வர்மன் காலம் வரையி லானபலநூறு ஆண்டுகாலம் சீன வணிகர்களுக்கு மாமல் லபுரமே பிரதானவியாபாரத் தலமாக இருந்தது. இதுகுறித்து கருத்து தெரி வித்துள்ள தொல்லியல் துறை ஆய்வாளரும், அழ கப்பா பல்கலைக்கழகப் பேராசிரியருமான எஸ்.ராஜ வேலு, சீனாவில் வாழும் 'ஹன்' எனப்படும் வணிக இனக் குழுவினர் தமிழர்க ளோடு நேரடியான வணிகத் தொடர்புவைத்திருந்தார்கள் என்றார். கி.மு.185-149ஆண்டுக ளில் வாழ்ந்த சீன அரசர்வீய், தங்கள் நாட்டில் உள்ள வர்த் தகர்களை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வர்த்தகம் செய்ய ஊக்கப்படுத்தினார் என்பதற் கான குறிப்புகள் உள்ளன என்றும் ராஜவேலுதெரிவித் கள்ளார்.

சீன அரசர் வீய் அதுமட்டுமல்லாமல், சீனாவில் காஞ்சிபுரத்தை ஹுவாங் செ என்று குறிப்பிடுவார்கள் என்றும், சீன அரசர்கள்தங்கள் பிரதிநிதிகளை காஞ்சிபுரத்துக்கு அனுப்பியுள்ளனர் என்றும், மாமல்லபுரம் அருகே இருக் கும் வயலூர் சான்றுகளை ஆய்வு செய்த போது, காஞ் சிக்கும் சீனாவுக்கும் இடை யேயானதொடர்பைப்பிரதி பலிக்கும் வகையில் சீன மண்ஜாடிகள், நாணயங்கள் சிக்கியதாகவும் அவர் கூறினார். சீனாவில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் ஓலைச்சுவடிகளும்கண்டுபி டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும், மாமல்லபுரத் திற்கும் இடையிலான பல நூறு ஆண்டு கால வணிக, வரலாற்றுத் தொடர்பின் அடிப்படையிலேயே மோடி - ஜி ஜின் பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வு செய் யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment