என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு இல்லை: சிபிஎஸ்இ

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும், 9, 11-ம் வகுப்புகளுக்கு ஆண்டுத்தேர்வும் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என்று வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ், பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் படியே நடைபெறும். எனவே, தவறான தகவல்களை மாண வர்கள் நம்ப வேண்டாம். மேலும், தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்டமும் (www.cbse.nic.in) இணைய தளத்தில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment