வடகிழக்கு பருவ மழை தொடக்கம் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

பருவமழைக் காலம் தொடங்கிய தால் பொதுத்தேர்வு மாணவர்களுக் குரிய பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட 4 நாட்கள் முன்னதாக கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை பருவமழை நீடிக்கும். இந்த பருவமழைக் காலத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் தமிழகம் பாதிக்கப்படுவதும் வழக்கம். மேலும், மழைப்பொழிவும் ஓரிரு நாட்கள் தொடரக்கூடிய வாய்ப்புள் ளது. இதனால் கனமழை நேரங் களில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பள்ளிகளுக்கு விடு முறை விடப்படும்.

கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்

இந்நிலையில் தற்போது பருவ மழை தொடங்கிவிட்டதால் அதை சமாளிக்கும் வகையில் ஆசிரியர் கள் தயாராக வேண்டும் என்று பள் ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளது. அதில், 2-ம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்தப் பட உள்ளது.

எனவே, அதற்குரிய பாடங் களை ஆசிரியர்கள் திட்ட மிட்டு விரைவாக முடிக்க வேண்டும். பருவமழையால் பள்ளிக்கு விடு முறை அளிக்கப்பட்டாலும், வேலை நாட்களில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை நடத்த வேண் டும். மேலும், பொதுத்தேர்வு மாண வர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment