உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, October 3, 2019

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்து வப் படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தி டம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப் பித்துள்ளது. ஆனால், அதன்பேரில் இதுவரை எந்த ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும், கிடைக்காவிட்டா லும் அடுத்த ஒரு சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய மருத்துவத் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத் துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத் தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. . எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையைப் போலவே சித்தா, ஹோமியோ பதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப் புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நிகழாண்டில் நீட்தரவரிசை அடிப்படையில் அப்படிப் புகளுக்கான மாணவர் சேர்க்கைகலந்தாய்வு நடைபெற்றது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 142 இடங்கள் நிரம்ப வில்லை . அதேபோன்று, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்நி லையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலமாக அந்த இடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment