கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு.

தமிழகம் மற்றும் புதுச்சேரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அதனால் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்து வருவதோடு, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு, மண் சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதேபோல் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்து வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. அதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை அதிக அளவில் இருக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

# தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை

No comments:

Post a Comment