உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, October 23, 2019

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை

  • அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார். 
  • சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர் 
  • இதுகுறித்து அளித்த பேட்டி 
  • அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 
  • அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது. 
  • இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
  • இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment