உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, October 10, 2019

நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கு (நெட்) விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர் வுக்கு அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத் திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் ('நெட்') தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன் படி, டிசம்பர் மாதத்துக்கான நெட்தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
தேர்வு எப்போது?  
இந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலானதேதிகளில் ஏதாவது ஒருநாளில் நடத்தப்பட உள் ளது. தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும். ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல் வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வுகள் முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 15-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண் ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியி டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment